மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடிதடியில் முடிந்த பச்சையப்பா கல்லூரி பொங்கல் கொண்டாட்டம்.. அதிரடி காட்டிய போலீஸ்..!
பச்சையப்பா கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பச்சையப்பா கல்லூரியில் நேற்று பொங்கல் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
அப்போது திருத்தணி மற்றும் பூந்தமல்லி பஸ் ரூட் மாணவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு மாணவர்களும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த கீழ்பாக்கம் போலீசார் கல்லூரி வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மாணவர்கள் சிதறி அடித்து ஓட்டம் எடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த கைகலப்பிற்க்கு காரணமான மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர. மேலும் தலைமுறைவாகியுள்ள மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்