மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டெறும்பு, நாகை 360, ஆரஞ்சு.., உட்பட 5 யூடியூப் சேனல்களுக்கு நெருங்கும் ஆப்பு? - பரபரப்பு புகாரால் பதற்றத்தில் பிராங்க் யூடியூபர்கள்.!
இளம்பெண்களை குறிவைத்து மனரீதியக, உடல் ரீதியாக துன்புறுத்தி பிராங்க் வீடியோ செய்யும் யூடியூப் சேனல்களின் தரம்கெட்ட செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கோவையை சேர்ந்த கோவை 360 யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருந்தனர்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரோஹித் குமார் என்பவர் கட்டெறும்பு, குல்பி, ஜெய் மணிவேல், ஆரஞ்சு மிட்டாய், நாகை 360 உட்பட 5 யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்த யூடியூப் சேனல்கள் பெண்களை அச்சுறுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்து வந்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகார் விசாரணையில் இருப்பதால், விசாரணைக்கு பின்னர் மேற்கூறிய யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதில், ஜெய் மணிவேல் யூடியூப் மற்றும் முகநூல் சேனலில் அலுவலகம் காத்து கருப்பு கலை மற்றும் அவரின் நண்பர்களால் அடித்து நொறுக்கப்பட்டது என வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.