மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை; தாயும் - சேயும் உயிரிழந்த பரிதாபம்.. நெஞ்சை பதறவைக்கும் கொடுமை..!
திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா காலனி காமராஜர் தெருவில் வசித்து வருபவர் மஞ்சு பிரியா (28). இவரது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர் அதனால் இவர் தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் திருச்சி மலைக் கோட்டையை சேர்ந்த சங்கர் பாபு (50) என்பவரை மஞ்சு பிரியாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். சங்கர் பாபு திருச்சியில் பை தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
இரண்டாவதாக மஞ்சு ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது மஞ்சு பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சங்கர் பாபுடன் சண்டை போட்டுக்கொண்டு மஞ்சு பிரியா கடந்த 5 மாதங்களாக சமயபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மனச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞாயிற்றுக் கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்ததால் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்து மஞ்சு பிரியாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஐந்து ஆண்டுகளில் மஞ்சு பிரியா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.