மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவணையை கேட்டு நெருக்கடி கொடுத்த நிதி நிறுவனம்: பெண் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அணுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயந்தி (45). இவர்கள் வீடு கட்டுவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக அவர்கள் மாத தவணை கட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமான கடந்த மாதம் தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தவணையை வசூலிக்க நிதி நிறுவனத்தினர் நேராக செல்வராஜ் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி வீட்டில் இல்லை. வீட்டில் ஜெயந்தியின் மகள் மட்டும் இருந்துள்ளார்.
நிதி நிறுவனத்தின் பிரதிநிகள் ஜெயந்தி மகளிடம் தவணை செலுத்தாதது குறித்து தெரிவித்ததுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் வீட்டுக்கு வந்த ஜெயந்தியிடம் நடந்த விவரம் குறித்து மகள் கூறியுள்ளார். இதனை கேட்ட ஜெயந்தி மனமுடைந்தார். தவணையை செலுத்துமாறு நிதி நிறுவனம் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த ஜெயந்தி தற்கொலை செய்ய தீர்மானித்துள்ளார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயந்தி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜெயந்தியின் உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கான கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.