ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஆத்தாடி... ரூ.58 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்.! அதிமுக முன்னாள் அமைச்சர், மகன்கள் மீது வழக்குப்பதிவு.!
முன்னாள் உணவுத்துறை அமைச்சர், தற்போதைய அ.தி.மு.க திருவாரூர் மாவட்ட செயலாளராகவும், தற்போது நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வருபவர் காமராஜ். இவர் 2015 முதல் 2021 -ம் வரையான அதிமுக ஆட்சிகாலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
இந்தநிலையில்,முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜுன் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் என 49 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இவர் உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காமராஜின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.