தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்! 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் வரும் திங்கள்கிழமை 18-ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதால் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், வெப்ப சலனம் காரணமாக சென்னைக்கு மழை கிடைத்துள்ளது என வானிலை மைய அதிகாரி புவியரசன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் உள்மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.