மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெப்பச் சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, தர்மபுரி, சேலம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் , நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு, வரும், 5ம் தேதி வரை செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.