மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடனை செலுத்தியும் 3 வருடமாக மாதாமாதம் ரூ.117 பிடித்தம்.. இராஜபாளையம் பஜாஜ் பைனான்ஸ் மீது பகீர் குற்றச்சாட்டு.!
6 மாத தவணையாக வாங்கிய செல்போனுக்கு கடன், வட்டி அனைத்தும் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் 3 வருடமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ரூ.117 வீதம் மாதாமாதம் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பகீர் செய்திகள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் இராஜபாளையம் நகரில் செயல்பட்டு வரும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "எனக்கு எந்த ஒரு இ.எம்.ஐ கார்டும் வேண்டாம். எனது வங்கி கணக்கில் இருந்து பணம் பிடிக்கக்கூடாது. எனது இ.எம்.ஐ கார்டை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பைனான்ஸ் இ.எம்.ஐ கார்டு எனக்கு வேண்டாம். அதன் பேரில் பிடித்தம் செய்யப்படும் நிகழ்வில் இருந்து விலக்கு அளித்து தருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் கடந்த 8 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2021 என்று எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கணேசன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "இராஜபாளையத்தில் செயல்பட்டுவரும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இ.எம்.ஐ முடிந்தபிறகும் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதாகவும், அதாவது மாதம் ரூபாய் 117 வீதம் எடுத்து வருகிறது. மேலும், தவணைத் தொகை முடிந்த பிறகும், அது தொடர்பாக எழுதிக் கொடுத்தும் அதையும் கண்டுகொள்ளாது இந்த செயலை செய்து வருகிறது.
இவ்வாறாக கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து 2022 ஆம் வரை வருடம் வரை வங்கிக் கணக்கிலிருந்து மாதாமாதம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. நான் ஆறுமாத இ.எம்.ஐ-உடைய செல்போன் ஒன்றை கடந்த 2018 ஆம் ஆண்டு வாங்கிய நிலையில், அதற்கான கடன் செலுத்தி என்.ஓ.சி சான்றிதழையும் வாங்கிவிட்டேன். இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து இ.எம்.ஐ கார்டு செலவு என்ற பெயரில் மாதாமாதம் பணம் எடுத்து வருகிறார்கள். அதனால் வெறுப்படைந்த நாள் இ.எம்.ஐ கார்டு வேண்டாம் என்று எழுதி கொடுத்து, அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து என்னிடம் பணம் எடுத்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.