#Breaking முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சட்டப்போராட்டம்..! விடுதலை காற்றை சுவாசிக்கிறார் பேரறிவாளன்.!



Rajiv Gandhi assassination case convict released 31 years

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

மிக முக்கியமான வழக்கு என்பதால் இந்த தீர்ப்பை தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மே 11ம் தேதி வரை இந்த வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டன. வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவானை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.