மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா குடிக்கி புள்ளிங்கோவை காதலித்த அக்கா.. ஒரே போடு, கழுத்தை கரகரவென அறுத்து கொலை செய்த தம்பி.!
கஞ்சா பழக்கம் கொண்டவரை தங்கை காதலித்து திருமணம் செய்ய வீட்டில் சம்மதம் வாங்கியதால், ஆத்திரமடைந்த அண்ணன் தங்கையை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் திருமண மண்டபத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுவாதி. இவருக்கு திருமண வயதாகிவிட்டதால், வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ள சுவாதி, தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி தவிர்த்து வந்துள்ளார்.
ஒரு சமயத்தில் தான் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறவே, இருவரும் ஒரே சமூகத்தார் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுவாதி, இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்த விசாரணை நடத்திய காவல்துறையினர், சுவாதியின் சகோதரர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொள்கையில், அவரின் கொலைக்கான மர்மம் நீங்கியது. நீண்ட நாட்களாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக சுவாதி, தனது காதல் திருமணம் குறித்தும், காதலன் குறித்தும் வீட்டில் தெரிவித்த நிலையில், சரவணன் சம்பந்தப்பட்ட பையனை எனக்கு பள்ளிக்கூடத்திலிருந்து தெரியும்.
அவன் அப்போதே பல பெண்களை காதலித்து வந்துள்ளான். போதாததுக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் உள்ளது. அவன் புள்ளிங்கோ போல சுற்றி வருவதால், சில பெண்களுடன் தகாத உறவும் உள்ளது. அந்த பையனை நீ காதலித்து, திருமணம் செய்தால் உனது வாழ்க்கை பாழாகிவிடும். இன்று நல்லவன் போல தெரிவான், நாளை சூழ்நிலை உனக்கு எதிராக திரும்பும் என சரவணன் அறிவுறுத்தி எச்சரித்துள்ளார்.
இதனை குடும்பத்தினரிடமும் தெரியப்படுத்திய நிலையில், சுவாதி வீட்டிற்கு மூத்த பிள்ளை என்பதால் அவரின் விருப்பப்படி திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களுக்குள் ஒரே ஜாதி சென்ற விஷயத்தால் சமூக பிரச்சனை ஏற்படாமல் இருந்த நிலையில், கஞ்சா குடிக்கி என் அக்காவை எப்படி பார்த்துக்கொள்வான்? என்ற மனஅழுத்தத்திற்கு சரவணன் சென்றுள்ளார்.
திருமண நாளும் நெருங்கி வந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்தில் இருந்து சரவணன் திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி சுவாதியை கண்டித்துள்ளார். அதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சகோதரியை சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து சரவணன் தப்பி ஓடியுள்ளார். சரவணனை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
தான் காதலிக்கும் இளைஞன் குறித்த உண்மையான பின்னணி தெரியாமல் பெண்கள் காதல் வலையில் விழுந்து, பின்னாளில் வீதியில் குடும்பத்திடமும் ஒட்ட முடியாமல், கலியுகத்தில் ஒருவரையும் நம்ப இயலாமல் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியான சூழல் தனது அக்காவுக்கு வந்துவிடக்கூடாது என நினைத்து சகோதரர் எடுத்த முயற்சி, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.