மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாத்தா பாட்டியிடம் செல்லமாக வளர்ந்த நான்கு வயது சிறுமி! மாடியிலிருந்து உருட்டி கொடூர கொலை செய்த சித்தி!
ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆயர்பாடியில் வசித்து வருபவர் சங்கர். இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த போது பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு சவுமியா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் சில சந்தோஷமாக வாழ்ந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதனை அடுத்து சங்கர் தனது குழந்தையை தனது அம்மா, அப்பாவிடம் விட்டு வளர்த்துள்ளார். சில நாட்களுக்கு பின் சங்கரின் பெற்றோர் சங்கருக்கு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாள் குழந்தை மயக்கமானதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் உடலில் காயம் ஏற்ப்பட்டுள்ளதை கண்டு குழந்தையின் தாத்தா, பாட்டி சந்தேகமடைந்து போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.
அதனை அடுத்து விசாரணையில் ஏற்ப்பட்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது சங்கரின் இரண்டாம் சந்தியா தான் குழந்தையை கட்டையால் அடுத்து மாடியிலிருந்து எட்டி உதைத்துள்ளார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.
அதாவது சந்தியா ஏழு மாதம் கர்ப்பமாக இருந்த காரணத்தில் குழந்தை சவுமியாவை பார்த்து கொள்ள முடியவில்லை. மேலும் கணவருடன் சந்தோஷமாக இருக்கமுடியாததால் ஆத்திரமடைந்த சந்தியா குழந்தையை எட்டி மாடியிலிருந்து உதைத்துள்ளார்.
இதனால் குழந்தையின் நெஞ்சில் பலத்த அடி ஏற்ப்பட்டு மயங்கியுள்ளது. அதனை அடுத்து மருத்துவமனை தூக்கி வரும் போது பாதி வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. உண்மை வெளியானதால் சந்தியா மற்றும் சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.