மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண நாளில் துயரம்; கணவன் - மனைவி பரிதாப பலி.. பச்சிளம் மகனின் உயிர் ஊசல்.. அதிவேக தனியார் பேருந்தால் பயங்கரம்.!
தங்களின் திருமணநாளை முன்னிட்டு கோவிலுக்கு புறப்பட்டு சென்ற தம்பதி விபத்தில் இறந்த சோகம் நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஈஸ்வரன் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
ஈஸ்வரனின் மனைவி சங்கீதா (வயது 29). இவர்களுக்கு கிஷோர் என்ற மூன்றரை வயது குழந்தையும், தஸ்வந்த் என்ற ஒரு வயது குழந்தையும் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
கிஷோர் எல்கேஜி படித்து வருகிறார். சங்கீதா - ஈஸ்வரன் தம்பதிகளுக்கு நேற்று திருமண நாள் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காலையில் கிஷோரை பள்ளிக்கு அனுப்பிய ஈஸ்வரன், தனது மனைவி சங்கீதா மற்றும் அஸ்வந்த் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு பச்சையம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள கடம்பன்தாங்கல் பகுதியில் சென்றபோது, ஆற்காட்டில் இருந்து செய்யார் நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஈஸ்வரன் மற்றும் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த சிறுவன் தஷ்வந்த் வாலாஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் & உறவினர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனியார் பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் அதிவகம் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் குற்றச்சாட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.