மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலை விபத்துகள் பட்டியலில் கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முதலிடம்.. சென்னையில் பலி எண்ணிக்கை குறைவு.! விபரம் உள்ளே.!
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில வாரியான விபத்துகள் பட்டியலில், சென்னையை புறந்தள்ளி கோவை மாவட்டம் அதிக விபத்து மரணங்களை சந்தித்துள்ளதாக புள்ளிப்பட்டியல் தெரிவிக்கின்றன.
சென்னையில் வழக்கமாக வாகன விபத்துகளால் பலி எண்ணிக்கை 700ஐ கடந்து பதிவாகும் சூழலில், நடப்பு ஆண்டில் அது 332 ஆக குறைந்துள்ளது.
அதேவேளையில், கோவை மாநிலத்தில் தொழில்வளர்ச்சி, சாலை விரிவாக்க பணிகளின் காரணமாக விபத்துகள் பலி எண்ணிக்கை 700ஐ நெருங்கி இருக்கிறது.
இரண்டாவது இடத்தில செங்கல்பட்டு மாவட்டத்தில் 585 பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த தரவுகளை வைத்து இனிவரும் காலங்களில் கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கலப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.