மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 2 பேர் பலி 4 பேர் படுகாயம்!!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி - சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் விஷ்ணு தேவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை திருச்சியில் நடைபெறும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு குடும்பத்துடன் மணி காரில் சென்றுள்ளார். அவர்களுடன் 2 உறவினர் வீட்டு பெண்களும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கார் மண்ணச்சநல்லூர் அடுத்த புலிவலம் வனப்பகுதியில் வரும் போது எதிரே சேலம் நோக்கி சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மணி மற்றும் அவரது மகன் விஷ்ணு தேவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சரண்யா, 2 உறவுக்கார பெண்கள் மற்றும் மற்றொரு காரை ஓட்டி வந்த நபர் ஆகிய நான்கு பேரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.