மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொகுசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... 2 பலி, பலர் படுகாயம்!!
சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு என சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே பேருந்து அதி வேகமாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் மோதி சாலையின் எதிர்திசையில் சென்றுள்ளது.
அதில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து வேகமாக மோதியது. அந்த விபத்தில் சொகுசு பேருந்தானது அப்பளமாக நொறுங்கி லாரியினுள் சொருகி நின்றது. இந்த விபத்தில் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நெடுஞ்சாலை பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் பேருந்துகளை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.