மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking தமிழக அரசியலில் புதிய மாற்றம்.! தேர்தலில் களமிறங்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்.!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் பல காட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அரசு பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக கடந்த மாதம் 21ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் சகாயம் அரசியல் களம் காண்போம் என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இன்று (11.03.2021) புதிய கட்சியை தொடங்குகிறார். இதுகுறித்து அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசவுள்ளார். மேலும் அவர் சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பது, மக்களுக்கான வாக்குறுதிகளை அளிப்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.