மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு ஊழிர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைப்பு; வங்கிகளுக்கு தகவல் அளித்து அரசு அதிரடி நடவடிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி துறை எச்சரித்தது.
இதைதொடர்ந்து நேற்று காலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பினர். திருச்சி மாவட்டத்திலும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என வங்கிகளின் கருவூலத்திற்கு அரசு தகவல் அளித்துள்ளது. அரசின் இந்த உத்தரவின் பெயரில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் நிறுத்தி வைப்பதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. இது அரசு ஊழியர்களிடையே மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.