திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ; ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.!
சேலத்தில் அதிமுக முக்கிய புள்ளியாகவும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வந்தவர் வெங்கடாசலம். இவர் இன்று தமிழ்நாடு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்றைய தினம், சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருபவருமான, வெங்கடாசலம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்டுள்ள ஈர்ப்பால், தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி இராமலிங்கம், கரு. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில், தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.
வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு, தூயதோர் அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகளில், அவர்கள் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தையும், பங்களிப்பையும் கோருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறான தருணத்தில் கட்சி தாவல் தொடர்பான விஷயங்கள் நடப்பது எளிதானது எனினும், 50 ஆண்டுகாலம் அரசியலில் ஈடுபட்டு வரும் அதிமுக முக்கியப்புள்ளி, பாஜகவில் இணைந்துள்ளது அதிமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை தந்துள்ளது.