மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுமதினமும் ஆடையை கிழித்து, அடித்து, ஊசியால் குத்தி கொடுமை செய்த கணவன்.. புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை.. கண்ணீருடன் வீடியோ.!
திருமணம் ஆன நாள்முதல் மனைவியை அடித்து, ஆடையை கிழித்து, ஊசியால் குத்தி கொடுமை செய்த கணவனால் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்த சோகம் நடந்துள்ளது. பெண்ணின் வாழ்க்கையில் திருமணத்திற்க்கு பின் நடந்த பேரழிவால் பறிபோன உயிர்குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை, வீராணம் சாலையில் வசித்து வருபவர் இராமசாமி. இவரின் மகள் மனோன்மணி (வயது 29). இவர் பட்டதாரி ஆவார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த். மனோன்மணிக்கும் - அரவிந்த்க்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெற்று வந்துள்ளது. மதுபோதைக்கு அடிமையான அரவிந்த், தான் முழுநேர குடிகாரன் என்பதை மறைத்து திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் மனைவி மனோன்மணிக்கு கணவரின் மதுப்பழக்கம் தொடர்பான உண்மை தெரியவரவே, அதுகுறித்து கேட்கையில் குடிகார கணவன் மனைவியை அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் மனமுடைந்துபோன மனோன்மணி, ஜனவரியில் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், கணவர் அனுதினமும் செய்யும் கொடுமையை கண்ணீருடன் எடுத்துரைத்து, கணவருடன் இனி வாழ இயலாது என்று கூறியுள்ளார்.
தனது திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று தினமும் நினைத்து மன அழுத்தத்தில் இருந்த மனோன்மணி, நேற்று திடீரென வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பலத்த தீக்காயத்துடன் அலறிய பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மனோன்மணி உயிரிழக்கவே, இந்த விஷயம் தொடர்பாக அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மனோன்மணியின் சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துவரும் வழியிலேயே மரண வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்துகொண்டார். இந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த கொடுமைககள் குறித்து மனோன்மணி கண்ணீர் பட தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், "எனது கணவர் அரவிந்த் சைக்கோ குணம் கொண்டவர். இரவு நேரத்தில் எனது ஆடைகளை கிழித்து, இரவில் என்னை உறங்கவிடமாட்டார். நான் உறங்கியதும் உடலில் ஊசிபோடுவார். காலையில் எனது கால்களில் இரத்தமாக இருக்கும். வீட்டில் யார் இருந்தாலும், எதனையும் கண்டுகொள்ளாமல் அரவிந்த் என்னை தொந்தரவு செய்வார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி தினமும் அழுவேன்.
தினமும் நேரங்களில் இரவு வேளைகளில் துணிகளை கிழித்து ஊசியால் குத்தி கொடுமை செய்வார். இதனை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வது இல்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மனோன்மணியின் தம்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த துயரம் போல வேறு யாருக்கும் நடக்க கூடாது எனவும் பெண்ணின் குடும்பத்தினர் கண்ணீருடன் குமுறுகின்றனர்.