மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்: தஞ்சாவூருக்கு புறப்பட்டார் சசிகலா.! காத்திருக்கும் சசிகலா ஆதரவாளர்கள்.!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. அந்த பிளவுதான் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலிலும், சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பின்னடைவை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்குப்பிறகு அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்தார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தற்போது சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்தநிலையில், அவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.