மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனில் ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்த தாய்.. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!
சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் வசித்து வருபவர் 17 வயது சுருதி. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனது தம்பியுடன் மாணவி ஸ்ருதி வீட்டில் படுத்துக் கொண்டிருந்தார்.
இரவு மனைவியின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அதுவரை மாணவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த தாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மாணவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனிடையே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரிது வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவியை படிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தாய் கண்டித்ததால் மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.