மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைக் ஹாரன் அடித்தும் ஒதுங்காத பள்ளி மாணவர்கள்.. ஆத்திரமடைந்த போதை ஆசாமிகளின் வெறிச்செயல்..!
புதுச்சேரி திருக்கானூர் பகுதியில் பாரதி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர் பள்ளி முடிந்ததும் ஒன்றாக பேசிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் பலமுறை ஹாரன் அடித்தும் மாணவர்கள் வழி விடாமல் பேசிக் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மது போதையில் மாணவர்களை தாக்கிய அந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.