6-ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்.! பதறிப்போன பெற்றோர்.!



school teacher misbehave to student

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. இருந்தபோதிலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்தநிலையில், 6-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். 45 வயது நிரம்பிய இவர், தேர்வாய்கண்டிகை பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்  6-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுந்தர்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.