மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயில்ல கூடவா.? சிறையில் கணவரை பார்க்கச் சென்ற பெண்... பாலியல் தொல்லை கொடுத்த சிறை காவலர்.!
நாமக்கல் மாவட்டத்தில் சிறையில் இருக்கும் கணவனை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு சிறை காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறை காவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வலையம்பட்டியை சேர்ந்த பைக் மெக்கானிக் சிவகுமார் என்பவர் திருட்டு வழக்கு சம்பந்தமாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருக்கும் கணவரை பார்ப்பதற்காக அவரது மனைவி சென்ற போது சிறை காவலரான விஜய்காந்த் என்பவர் அவரது மனைவியின் செல்போன் என்னை குறித்து வைத்து அடிக்கடி போன் செய்து பாலியல் தொந்தரவு செய்து இருக்கிறார். மேலும் அவரோடு உல்லாசத்தில் ஈடுபடும்படி வற்புறுத்தி இருக்கிறார்..
இது தொடர்பாக கணவனை சிறையில் சந்திக்கும் போது அவரது மனைவி சிவகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிவக்குமாரின் நண்பர் தனபால் என்பவரின் உதவியுடன் சிறைத்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் சிறை காவலர் விஜயகாந்திற்கு எதிராக புகார் அளித்திருக்கின்றனர். ஆனால் அங்கு இருந்த அதிகாரிகளோ சிறை காவலர் விஜயகாந்த் உடன் அனுசரித்து செல்லுமாறு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமாரின் மனைவி சிறை காவலரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் சிறை காவலர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.