மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாடிப்பட்டியில் அதிர்ச்சி.. அடுத்தடுத்து கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலிசார் வலை வீச்சு.!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகிலுள்ள குலசேகரன் கோட்டையில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் அந்த கொள்ளையர்கள் கோயிலிலுள்ள சிவனின் கருவறையை உடைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அன்று இரவே அதே பகுதியில் உள்ள நவநீத பெருமாள் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த நாள் காலை இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இரண்டு கோவிலுக்கும் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துறை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவான கைரேகைகளை சேகரிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் தான் வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் துர்க்கையம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.