மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நோயாளியை கள்ளகாதலியாக்கி, அவரின் மகளை சீரழித்த காரைக்குடி தனியார் மருத்துவமனை மருத்துவர்.!
சிறுமியின் தாயாரை கள்ளக்காதலில் வீழ்த்தி, சிறுமியை சீரழித்த மருத்துவர் போக்ஸோவில் கைதாகியுள்ளார். எலும்பு முறிவு மருத்துவரின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமி, திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரின் தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில், தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். சிறுமியின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாத நேரத்தில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் பி.கே.என் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளனர்.
இதனால் மருத்துவமனை மருத்துவர் மோகன் குமார் சிறுமி மற்றும் அவரின் தாயருடன் நட்பு ரீதியாக பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவ்வப்போது சிறுமியின் தாயாருக்கு சிகிச்சை அளிக்கிறேன் என அவரின் இல்லத்திற்கே சென்று வந்துள்ளார். சிறுமியின் தாயாரும் - மருத்துவரும் ஒரே அறையில் இரவு வரை தங்கியிருந்த நிலையில், தந்தைக்கு மகள் விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார்.
இதனை அறிந்த சிறுமியின் தந்தை தனது மனைவியை கண்டித்த நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக சிறுமி புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் பயின்று வருகையில், மருத்துவர் மோகன் குமார் சிறுமியை காரில் அழைத்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். முதலில் சிறுமிக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் இருந்த நிலையில், மருத்துவரின் செயல்பாடுகள் அதனை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் தோள்களில் கைகளைப்போட்டு, அவரது தாயுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காண்பித்து, நீயும் என்னுடன் இப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுத்து, மருத்துவரிடம் இருந்து விலகி இருந்த நிலையில், கொரோனா காலத்தில் சிறுமி வீட்டில் இருந்தவாறு படித்து வந்தபோது, மருத்துவர் வீட்டிற்கு வந்து பயாலஜி பாடம் சொல்லித்தருகிறேன் என்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், யூடியூபில் இருக்கும் ஆபாச வீடியோவை கான்பது, இதனைப்போல பாடத்தில் இருக்கும் என்றும் பாலியல் தொல்லை கொடுத்து, கடந்த 2020 டிசம்பர் மாதம் சிறுமி தம்பியுடன் உறங்கிக்கொண்டு இருக்கும் போது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தற்போது காவல் துறையினருக்கு இணையவழியில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காரைக்குடி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரைக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து, எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரான மோகன் குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.