மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாடகைக்கு குடியிருந்த வீட்டில், மகன் போல நடித்து கொள்ளை.. கல்லூரி மாணவர் பரபரப்பு காரியம்..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சூடாமணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லதா. இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டு மாடியில் உள்ள இரண்டு அறையில், கல்லூரி மாணவர் உட்பட 8 பேர் தங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல், சாப்பிட்டுக்கொண்டு இருந்த கல்லூரி மாணவனை கட்டையால் அடித்து, லதா மற்றும் அவரின் தாயை கத்தியால் வெட்டி, மிரட்டி 17 சவரன் நகைகையை பறித்து சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக லதா காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவர் பூபதி பாண்டியன், லதாவுக்கு உதவுவது போல நடித்து அவரின் நகைகள் தொடர்பாக தகவல் தெரிந்து வைத்துள்ளார்.
இந்த தகவலை வைத்து நண்பர்கள் உதவியுடன் கொள்ளையடித்ததும் அம்பலமாகியுள்ளது. மேலும், காவல் துறையினர் வசம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னையும் தக்கச்சொல்லி இருக்கிறார். இதனையடுத்து, பூபதி பாண்டியன், ஆனந்த், சுதன், ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 17 சவரன் நகையும் மீட்கப்பட்டது.