96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அழுதுகொண்டே இருந்த குழந்தை; பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொன்று தாயும் பலி.. சிவகங்கையில் அதிர்ச்சி.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம், தவத்தாரேந்தல், வலையப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 38). இவர் வேலி அமைக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். முருகனின் மனைவி அழகுமீனா (வயது 34).
தம்பதிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரின் அன்புக்கு அடையாளமாக ஆறு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே, கடந்த 4 நாட்களாக குழந்தை தொடர்ந்து உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை; தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!
பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை
வீட்டில் முருகனின் தந்தை மரம் அறுக்கும் தொழிலை செய்து வருவதால், எப்போதும் வீட்டில் மரம் அறுக்கும் இயந்திரத்திற்காக பெட்ரோல் நிரப்ப கேனில் இருப்பு வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் அழகுமீனா பெட்ரோல் கேனுடன் கண்மாய்க்கு சென்றுள்ளார்.
அங்கு தன்மீதும், குழந்தை மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தீயை கட்டுப்படுத்தி திருபுவனம் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அழகுமீனா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.6 இலட்சம் நகைக்காக மூதாட்டி இரும்பு ராடால் அடித்தே கொலை; வாடகைக்கு குடியிருந்த வடமாநில இளைஞரின் அதிர்ச்சி செயல்?.!