மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த சம்பவத்திற்கு நீதான் காரணம்... பெரியம்மாவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு..! பறிபோன உயிர்..!!
மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதற்கு, பெரியம்மா தான் காரணம் என அவரை ராணுவவீரர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பூதிப்புரம் அருகாமையில் வாழையாத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்புராஜ். இவரது மகன் கண்ணன் (வயது 38). இவர் ராணுவ வீரராக பணியாற்றி, சில நாட்களுக்கு முன்பு தான் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
ஆனால், கண்ணன் இதற்கு தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என்று அவருடன் சண்டையிட்டு வந்த நிலையில், சம்பவ தினத்தன்று இரவு வாழையாத்துப்பட்டியில் உள்ள தனது மகளின் வீட்டில் முத்தம்மாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் முத்தம்மாளுடன் கண்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த கண்ணன் அரிவாளால் தனது பெரியம்மாவை சரமாரியாக வெட்டிய நிலையில், கண்ணனின் பெரியம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கண்ணன் யாரிடமும் பிடிபடாமல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரரை வலைவீசி தேடி வருகின்றனர்.