மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏன்டா இப்படி முடி வளர்க்கிறாய்.? என கேட்ட பெற்றோர்.! நொடிப்பொழுதில் மகன் எடுத்த விபரீத முடிவு.!
சென்னை பூந்தமல்லி புதுத்தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் பிரஷாந்த். 20 வயது நிரம்பிய இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில், பிரஷாந்த் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவரது அறைக்குள் தூங்க சென்றவர் அதிகாலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரஷாந்த் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்து கிடந்த பிரஷாந்த் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரஷாந்த் தலையில் அதிக அளவில் முடி வளர்த்து வந்ததாகவும், ஏன் இவ்வளவு முடி வளர்க்கிறாய்? அதனை வெட்ட வேண்டியது தானே? என பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.