"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் எடுத்த விபரீத முடிவு.! மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! துயர சம்பவம்!!
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் பகுதியில் வசித்து வந்தவர் 32 வயது நிறைந்த வள்ளிநாயகம். இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் போலீஸ் ரோந்து வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி திலகவதி. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வள்ளிநாயகம் அண்மையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுடன் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வாகனம் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோந்து வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி அதனை விபத்துக்குள்ளாக்கியதாக வள்ளிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலடைந்த வள்ளிநாயகம் இதுகுறித்து சக காவலர்களிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீடு திரும்பிய மனைவி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வள்ளிநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.