பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பனிரெண்டு - பன்னிரண்டு... எது சரியானது?.. குழப்பத்திற்கான தீர்வு இதோ.!
தமிழில் உள்ள வார்த்தைகள் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை சந்தித்து பல மருவி இருக்கின்றன. அவ்வகையில், இன்று பன்னிரண்டு மற்றும் பனிரெண்டு இவற்றில் எது சரியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பன்னிரண்டு - பனிரெண்டு: இவற்றில் பன்னிரண்டு என்பதே சரியானது. பனிரெண்டு என்பது தவறானது. ஏனெனில், பத்து + இரண்டு சேரும் போது பன்னிரண்டு உருவாகிறது.
தமிழ் இலக்கண விதியின்படி, பத்து + இரண்டு ஆகிய சொற்கள் சேரும்போது பத்து என்பது பன் என்ற சொல்லாக மறுவுகிறது. பன் என்பது இரண்டு என்ற சொல்லுடன் புணரும்போது, புணர்ச்சி விதியின்படி ஒற்று இரட்டித்து பன்னிரண்டு சொல் உருவாகிறது.
மரபுக்கவிதை எழுதுகையில் யாப்பிலக்கணம் கூறும் விதிகளை பின்பற்ற, பன்னிரெண்டு என்பது வேண்டுமென்றே பனிரெண்டு என மாற்றப்பட்டது. பின்னாளில் அவையே பெரும்பாலும் உபயோகம் செய்யப்பட்டது. ஆனால், எப்படி எழுதினாலும் பொருளளவில் மாற்றம் என்பது இல்லை.
இருப்பினும், இலக்கண விதியின்படி பன்னிரண்டு என்பது சரியானது என்பதால், அதனையே நாம் உபயோகம் செய்வது சரியானது. பனிரெண்டு என்பது தவறானது. பன்னிரண்டு என்பதையே நாம் உபயோகம் செய்வது சரியானது. பனிரெண்டை தவிர்க்க வேண்டும்.