மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதமான இனிய செய்தி! தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் ஃபானி புயலால் மழை பெய்யும் என எதிர்பார்த்து வந்தநிலையில் புயல் ஒடிசாவுக்கு சென்றதால் வழக்கம்போல் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கிருஷ்ணகிாி, வேலூா், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கோயம்புத்தூா் ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் தெற்கு தென்மேற்கு திசை நோக்கி 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக வரும் 8ம் தேதி முதல் கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் திருப்பூா், அவிநாசி, சூலூா் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.