மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணியிடம் பறிபோகும் நிலையிலும் போராட்டமா! ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பெரும் பரபரப்பு.!
நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்த நிலையிலும் தங்களது போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அமைப்புக்கு ஆதரவாக பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் நாளை முதல் பணிக்கு திரும்பாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தங்களது போராட்டத்தை தொடரப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் மதுரையில் செய்தியாளா்களிடம் பேசுகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறியது போன்று பழைய ஓய்வூதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று தான் நாங்கள் போராடுகிறோம். நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் போராடுபவா்களின் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், நாளையும் வேலை நிறுத்தம் தொடரும் என்று அவா் தொிவித்துள்ளாா்.