மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சஸ்பெண்டான ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிப்பு; அரசு அதிரடி நடவடிக்கை.!
போராட்டத்தில் ஈடுபட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடங்களை காலி பணியிடங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு போராட்டங்களில் ஈடுபடாமல் தற்சமயம் பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்ந்தெடுத்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.