மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனடாவில் படித்துவரும் தமிழக மாணவிக்கு கத்திக்குத்து! அதிர்ச்சி சம்பவம்!
நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்ற 23 வயது பெண் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த புதன் கிழமை இரவு 10 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் அவர் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் சரம்வாரியாக குத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெறுகிறார். அவரை கத்தியால் குத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறோம் என கூறினர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராச்சலின் உறவினர் இணையம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கனடா செல்வதற்கு உடனே விசா வழங்குமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.