மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 20 & 21ம் தேதிகளில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை.!
தமிழகத்தின் வடமாவட்டங்களில் 20 மற்றும் 21ம் தேதிகளில் பல இடங்களில் கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேர நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி இருக்கிறது. திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 18.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் 19 ஆம் தேதி வலுப்பெறும். அதற்கு அடுத்த மூன்று நாட்களில் மேற்கு - வடக்கு திசையில் தமிழக - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி இது நகரக்கூடும்.
17 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 19 ஆம் தேதியை பொறுத்தவரையில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20ம் தேதியை பொறுத்தவரையில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21ஆம் தேதியை பொறுத்தவரையில் வடதமிழகம், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடத்திலும் இடி மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் ஒரு சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 17 ஆம் தேதியான இன்று அந்தமான் கடல், அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
18ம் தேதியில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.