#Breaking : தீபஒளி பண்டிகையை முன்னிட்டு, அரசு டாஸ்மாக்கில் 2 நாட்களில் ரூ.465 கோடி வசூல்...! மண்டலம் வாரியாக மதுரையில் அதிகபட்ச விற்பனை.!



Tasmac deepawali Collection Rs 434 Crore INR 2 Days

 

பண்டிகை காலம் என்றாலே இன்றளவில் மதுபானம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என யார் வந்தாலும், உன் வீட்டில் பண்டிகையா? எனக்கு சரக்கு வாங்கி கொடு என கேட்டு வாங்கி செல்கின்றனர். 

தமிழ்நாடு அரசு நடப்பு ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி டாஸ்மாக் விற்பனை என்ற இலக்குக்கு திட்டமிட்டு இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தன. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் அரசு மதுபானக்கடையில் ரூ.465 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ரூ.464 .21 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இதில், மண்டல வாரியாக 22 ம் தேதியில் சென்னையில் ரூ.38 கோடிக்கும், திருச்சியில் ரூ.41 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், மதுரையில் ரூ.45 கோடிக்கும், கோவையில் ரூ.39 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

23 ம் தேதியில் சென்னையில் ரூ.51 கோடிக்கும், திருச்சியில் ரூ. 50 கோடிக்கும், சேலத்தில் ரூ.52 கோடிக்கும், மதுரையில் ரூ.55 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாளிலும் மதுபான விற்பனை நடைபெறும் என்பதால், விரைவில் ரூ.600 கோடி இலக்கை தாண்டும் என எதிர்பார்க்கபடுகிறது.