மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 நாட்களுக்கு டாஸ்மாக் லீவ்.! குடிமகன்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
கார்த்திகை தீபம் வர இருப்பதை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது பற்றிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி," வரும் நவம்பர் 25, நவம்பர் 26 மற்றும் நவம்பர் 27 உள்ளிட்ட தேதிகளில் மூடப்பட உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழாவை பக்தர்கள் எந்தவித தடை மற்றும் சண்டை சச்சரவு இல்லாமல் கொண்டாட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுதும் இருக்கும் முருகன் திருக்கோவில்களில் கந்த சஷ்டி விசேஷத்தை முன்னிட்டு பழனி மற்றும் திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.