#BREAKING | அதிரடியாக உயர்த்தப்பட்ட மது பாட்டில்களின் விலை.! அதிர்ந்து போன குடிமகன்கள்.!
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்ற மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ₹.10 அதிகம் வசூலிப்பதாக தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் புகார்கள் எழுந்தன. இது குறித்த வீடியோக்களும், குடிமகன்களின் ஆதங்க பதிவுகளும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இது பற்றி டாஸ்மாக் மேலான் இயக்குனர் விசாகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு அதிக தொகையை வசூலித்தால் அவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் அளிக்கும் பட்சத்தில், டாஸ்மாக் நிர்வாகிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது டாஸ்மாக்கில் விற்கப்படும் வெளிநாட்டு மது பாட்டில்களின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 750 மிலி அளவு கொண்ட ஒரு மது பாட்டில் ₹.250 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தகவல் குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியை தரும் விதமாக அமைந்துள்ளது.