ஏன், எதற்கு... மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்... அரசின் அதிரடி உத்தரவால் ஷாக்கான குடிமகன்கள்...



Tasmac shop leave for three days tamilnadu government announced

தமிழகத்தில், காலியாக உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் வரும் சனிக்கிழமை அதாவது 9 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் இதில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வருகின்ற 12 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இதன் காரணமாக வாக்குபதிவு நடைப்பெறும் இடம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி உள்ள சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று காலை 10 மணி முதல் நாளை மறுநாள் அதாவது 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tasmac shop

மேலும், டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறந்து வைக்க அனுமதி இல்லை. அதனையும் மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.