டாஸ்மாக் மதுபான விற்பனை நேரத்தை குறைக்க; தமிழக அரசுக்கு உத்தரவு... ஐகோர்ட் மதுரை கிளை...!!



Tasmac to reduce liquor sales time; Order to Tamil Nadu Govt... ICourt Madurai Branch..

மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க பரிதுரை செய்துள்ளது.  

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்கவும் மள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மகாதேவன், சத்தியநாராயண பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

பொது மக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை செய்யப்படும்‌ நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். 

மேலும் காவல்துறையினர் மூலம் மது விற்பனை செய்பவர்களுகளுக்கு உரிய உரிமம் வழங்கவும் அந்த அமர்வு பரிந்துரைத்துள்ளது. மேலும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதில்லை  என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.