மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக் எப்போது திறக்கப்படுகிறது? அதிரடி அறிவிப்பால், சோகத்தில் மதுபிரியர்கள்!
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
கொரோனா இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் கடந்த அதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ளதால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் இதை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதேபோல், மறைமுக மதுவிற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். 31ம் தேதிக்கு பின்னர் டாஸ்மாக் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுவால் குடும்பத்தில் நிம்மதியை இழந்த பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே டாஸ்மாக் மூடிவிட்டாலும் நிம்மதிதான் என பெண்கள் தெரிவித்துள்ளனர்.