தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நிபந்தனைகளை மீறினால் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும்! நீதிமன்றம் அதிரடி!
இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நிபந்தனைகளை மீறும் மதுபானக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தநிலையில் இந்தியாவில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மது வாங்க வருபவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை பின்பற்ற மாட்டார்கள். மதுக்கடைகள் திறக்கப்பட்டால், குறைந்துள்ள குற்றச்சம்பவங்கள் எல்லாம் அதிகரிக்க தொடங்கிவிடும் உள்ளிட்ட பல புகார்களை வைத்திருந்தார். ஆனாலும் நீதிமன்றம் பல நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளித்துள்ளது.
அதில், ஒரு நபருக்கு அதிகபட்சம் (750 மி.லி கொண்ட) இரண்டு பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும், அதேபோல் ஒருவருக்கு 3 நாள் இடைவெளிவிட்டு வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். மதுவாங்குவோரின் ஆதார் அட்டைகளை பெற்று, மது விற்பனைக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் மது விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுபோன்ற நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.