மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிமகன்களை எதிர்பார்த்து டாஸ்மாக் கடைகள் முன்பு தீவிரமாக அமைக்கப்படும் வாடிவாசல்!
டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட மது விற்பனைக்கான பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இந்தநிலையில் இந்தியாவில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகளில் கடைகள் நாளை திறக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாளை கடையை திறப்பதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு விழா நடத்துவது போல டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.