தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்பட்ட நிலை? தமிழில் பேசியதால் மாணவனின் காதை கிழித்த ஆசிரியை!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தங்களது பள்ளி வளாகத்திற்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்துள்ளது. இதனை மீறி தமிழில் பேசுபவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ப அபராதம், அடி, திட்டு மற்றும் பெற்றோர்களிடம் புகார் என தண்டனைகள் உள்ளது.
அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் வகுப்பறையில் தமிழில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை நாயகி மாணவனின் காதை பிடித்து திருகியுள்ளார். இதனால் மாணவன் வலியால் அலறி துடித்துள்ளான்.
இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே மாணவனை தாக்கிய ஆசிரியரையும் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.