மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாஸ்க் ரூ.5, அபராதம் ரூ.200, மருத்துவ செலவு ரூ.2 இலட்சம்.. நல்ல முடிவா எடுத்துக்கோங்க - குற்றாலம் காவல்துறை.!
குற்றாலம் காவல் துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில், முகக்கவசத்தை குறிப்பிட்டு ரூ.5 எனவும், காவல்துறை அதிகாரிகளை குறிப்பிட்டு ரூ.200 என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை குறிப்பிட்டு ரூ.2 இலட்சம் எனவும் பதிவு செய்துள்ளனர்.
அதாவது, 5 ரூபாய் கொடுத்து முகக்கவசம் அணிந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவாத பட்சத்தில், காவல் துறை அதிகாரி கண்காணித்து உங்களிடம் ரூ.200 அபராதம் விதிப்பார், அதிகாரிகளிடம் தப்பிவிட்டதாக எண்ணி அலட்சியமாக இருந்தால் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதியாகி ரூ.2 இலட்சம் வரை மருத்துவ செலவுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
ஆகையால், அனைவரும் ரூ.5 செலவில் முகக்கவசம் வாங்கி அணிய வேண்டும். இதனை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வாக ஏற்படுத்தும் பொருட்டு அதிகாரிகள் இந்த போஸ்டரை குற்றாலம் பகுதியில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.