மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் கருத்து வேறுபாடு; மனமுடைந்த கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை.. வார்டு உறுப்பினரின் வாழ்க்கையில் பரிதாபம்.!
கணவர் வெளிநாட்டில் குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க, உள்ளூரில் வார்டு உறுப்பினரான பெண்மணி கள்ளக்காதலன் பேசாத வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். தாயை எண்ணி பிள்ளைகளும், மனைவியை எண்ணி கணவனும் கண்ணீரில் தத்தளிக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், போகநல்லூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பேச்சித்தாய். இவரின் கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர் தனது குழந்தைகளுடன் சுந்தரேசபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பேச்சித்தாய்க்கும் - அப்பகுதியை சேர்ந்த இலங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வப்போது உல்லாசமாக இருக்க ஒன்றினையும் ஜோடி மனவெறுப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், கள்ளக்காதலன் பேசாமல் இருந்ததால் பேச்சித்தாய்க்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இன்று வீட்டில் தனியாக இருந்த பேச்சித்தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.