35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
நடத்தை சதேகத்தால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன்.. தாயின் உடலருகே கதறிய பிஞ்சுகள்.!
வேலை தொடர்பாக மனைவி நீண்ட நேரம் செல்போனில் பேச, சந்தேகமடைந்த கணவன் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம், அத்திப்பட்டி கே.கே நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மகன் சின்ன முனியசாமி (வயது 36). இதே ஊரை சேர்ந்தவர் கவிதா (வயது 32). சின்ன முனியசாமிக்கும் - கவிதாவுக்கும் இடையே கடந்த 11 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு முகேஷ் என்ற 9 வயது மகனும், நவசியா என்ற 6 வயது மகளும் உள்ளனர்.
முனியசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வருவதால், வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து மனைவி, பிள்ளைகளை பார்த்து சென்றுள்ளார். கவிதா அத்திப்பட்டி பஞ்சாயத்தில் சமூக தணிக்கை ஒப்பந்த பணியாளராக வேலைபார்த்து வந்துள்ளார்.
அவரின் பணி தொடர்பாக நீண்ட நேரம் கவிதா அலைபேசியில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று சின்ன முனியசாமி ஊருக்கு வந்திருந்த நிலையில், கவிதா அலைபேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட முனியசாமி, இதுகுறித்து கேட்கையில் கணவன் - மனைவி சண்டை ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் கவிதா தனது துணிகளை எடுத்துக்கொண்டு தந்தையின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். மனைவியை கணவர் தடுக்க முயன்றதால் மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சின்ன முனியசாமி மனைவி கவிதாவை கீழே தள்ளி தலையில் கல்லைப்போட்டுள்ளார். படுகாயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகினார்.
அருகில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் தாயின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் வந்துள்ளனர். தாய் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில், அம்மா எழுந்திரு அம்மா என்று கூறி கதறி அழுதுள்ளார். குழந்தைகளின் அழுகுரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கவிதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மனைவியை கொலை செய்துவிட்டு மன வருத்தத்தில் புறப்பட்டு சென்ற சின்ன முனியசாமி, குருவிகுளம் காவல் நிலையத்திற்கு சென்று தகவலை தெரிவித்து சரணடைந்துள்ளார். காவல் துறையினர் சின்ன முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.