மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார காதல் கணவனை நம்பி பலனில்லை - தாய் வீட்டிற்கு மனைவி சென்றதால், இளைஞர் தற்கொலை.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சுல்தான். இவரின் மகன் கனியப்பா (வயது 23). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அங்குள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண்மணி சுப்புலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இருவருக்கும் தற்போது 2 வயதுடைய ஆண் குழந்தை உள்ள நிலையில், கனியப்பா சரிவர வேலைக்கு செல்லாமல் மதுபோதைக்கு அடிமையாகி இருக்கிறார். மனைவியிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கணவரிடம் சண்டையிட்ட சுப்புலட்சுமி, தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால், வாழ்க்கையில் கனியப்பாவுக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த செங்கோட்டை காவல் துறையினர், கனியப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.